எம்மைப்பற்றி

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திர கற்றல் தளம் பற்றி மேலும் அறிந்து கொள்ள

ம.அ.ந.சு (FORB ) கற்றல் தளமானது, அனைவருக்குமான மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு மற்றும் ஊக்குவிக்கப்படும் ஒரு உலகத்திற்கு பங்களிப்பு செய்ய விரும்பும் ஒவ்வொருவரின் கற்றல் தேவைகளுக்கும் வளங்களை அளிக்க முயல்கிறது.

எதனை ?

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினைக் கற்றுக்கொள்வதற்கான தளமானது தனிநபர்கள், சமுதாயங்கள் மற்றும் தீர்மானமெடுப்பவர்கள், அனைவருக்குமான மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் பற்றிக் கற்றுக் கொள்வதற்கும், அவற்றை பிரதிபலிப்பதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் உதவி செய்வதைநோக்கமாக கொண்டுள்ளது.

இதன் பொருட்டு இலவச பயிற்சி நெறிகள் கற்றலுக்கான வளங்கள,; மற்றும் வலையமைப்பாக்கத்திற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றது. தனிப்பட்ட கற்கை பணியாளர் பயிற்சி என்பதோடு இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் குழுக்களுடன் பயன்படுத்தக்கூடிய கல்வியாளர்கள் மற்றும் நெறியாளருக்கான வளங்களை இந்த தளம் கொண்டுள்ளது.

தரம் மற்றும் அணுகக்கூடிய தன்மையை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பல மொழிகளில் வளங்களை வழங்க முயல்கிறோம், மேலும் எங்கள் முக்கிய வளங்கள் என்பன நிபுணர்களுடனும், பல்வேறு மதம் மற்றும் நம்பிக்கை பின்னணியில் உள்ளவர்களுடனுமான உரையாடல் மூலம் உருவாக்கப்படுகின்றன.

எதற்காக ?

மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தை மீறுவது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சமுதாயத்தின் மீது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இக் கற்றல் தளமானது, கள மட்டத்திலிருந்து மேல்மட்டத்தில் இருப்போர் வரை அனைவருக்கும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கு ஏற்ற சமூக, அரசியல் மற்றும் சட்ட கலாச்சாரத்தை உருவாக்க பங்களிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி ஆகியவை மனித உரிமைகளின் மேற் தங்கியுள்ளது, நமக்குள் ஆழ்ந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கான குறைவான எமது திறனுக்கப்பால் அது அனைவருக்குமான உரிமைகளை ஏற்றுக்கொள்தலைப் பொறுத்தது.

யாருக்காக ?

கற்றல் தள வளங்கள் பரந்த அளவிலான சூழ்நிலைகளுக்கும் பரந்த அளவிலான பாவனையாளருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அபிவிருத்தி வல்லுநர்கள்
  • காவல்துறை ஊழியர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற நீதி அமைப்பின் அதிகாரிகள் உட்பட, பொதுக் கொள்கையை உருவாக்குவதற்கு அல்லது அதனை செயல்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள்
  • மத மற்றும் நம்பிக்கை சமூகங்களின் உறுப்பினர்கள், திருநிலை படுத்தப்பட்ட தலைவர்கள் அல்லது பொதுநிலை தலைவர்கள்
  • இறையியற் கல்லூரிகள் போன்ற மதத் தலைவர்களுக்கான பயிற்சி நிறுவனங்கள்
  • மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் அல்லது மதப் படிப்புகளைப் படிக்கும் கல்வி நிறுவனங்கள் / கற்கும் மாணவர்கள்
  • தீவிர அத்துமீறல்கள் நிகழும் சூழல்களில் பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவன (NGO) ஊழியர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள்
  • மனித உரிமைகள் மற்றும் மத அல்லது நம்பிக்கை சுதந்திர அமைப்புகளுக்குள் பணிபுரியும் பணியாளர்கள்
  • ஊடகத்துறை சார்ந்தோர்

யாரால் ?

மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான கற்றல் தளமானது மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான நோர்டிக் சர்வமத வலையமைப்பினரால் (NORFORB) மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச பிரகடனத்தின்; பிரிவு 18 இற்கு அமைவாக அனைவருக்குமான மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தின் உரிமையை ஊக்குவிக்க தொழிற்படும் பரந்த அளவிலான மத சார்பற்ற மற்றும் நம்பிக்கை சார் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.

NORFORB பற்றி மேலும் அறியவும், நாம் யாருடன் இணைந்து பணியாற்றுகிறோம், யார் ஆலோசனை வழங்குகிறார்கள் மற்றும் யார் எமக்கு நிதியளிக்கிறார்கள் என்பவற்றை கீழே அறிந்து கொள்ளுங்கள்.

மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான நோர்டிக் சர்வமத வலையமைப்பு (NORFORB)

மேலும் வாசிக்க

இத்தளத்தின் பங்காளர்கள்

மேலும் வாசிக்க

நிதியளிக்கும் பங்குதாரர்கள்

ளுரடிளஉசiடிந வழ டிந ழெவகைநைன றாநn உழரசளநளஇ சநளழரசஉநள யனெ வசயளெடயவழைளெ யசந சநடநயளநன. பயிற்சி நெறிகள், வளங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படுவதனை அறிந்துகொள்ள Subscribe செய்யுங்கள்

எங்கள் செய்திமடலுக்கு Subscribe செய்யவும்

Subscribe