உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குநர்களுக்கான பயிற்சி நெறி

இப்பயிற்சி நெறி என்ன?

உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குனர்களுக்கான பயிற்சி நெறி என்பது ஒன்பது நேருக்கு நேர் பட்டறைகளின் தொடராகும், இது பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் தங்கள் சமூகங்களில் உள்ள அனைவருக்கும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தைப் பற்றி (ம.அ.ந.சு) (FORB) அறியவும் , அதனை மதிக்க மற்றும் ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியின் முழுமையான பாடத்திட்டம் உள்ளதுடன் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் விதத்தில் இதனை இலவசமாகபதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது.

இப்பயிற்சி நெறியினை நடாத்துவது எதற்காக ?

அநேகமானோர்,மதச் சுதந்திரம் மீறப்படுவதையும், தங்கள் சமூகத்தில் உள்ள மதங்களுக்கு இடையிலான பதட்ட நிலை பற்றியும் கவலைப்படுகிறார்கள், இருப்பினும் அவற்றில் எவ்வாறு மாற்றமொன்றினை ஏற்படுத்துவது என்பது பற்றிய சரியான விளக்கம் இல்லத்திருக்கின்றார்கள்.

உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குனர்களுக்கான பயிற்சி நெறி என்பது உள்ளூர் சமூகங்களுக்கு மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ளவும் மதிப்பளிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் பயன்படுத்தக்கூடிய உத்திகளைக் கண்டறியவும் உதவுகிறது.

இந்த பாடநெறியானது, அனைத்து சாதாரண மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது – மனித உரிமைகள் பொருத்தமற்றது அல்லது வெளிநாட்டு திணிப்பு என்று கருதுபவர்கள் உட்பட. இந்த பாடநெறியானது சமயங்களுக்கிடையேயான உரையாடல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகளை ஒன்றிணைத்து, பங்கேற்பாளர்களை மையமாகக் கொண்ட முறையைப் பயன்படுத்தி, கதைசொல்லல், காட்சித் தொடர்பு மற்றும் பங்கேற்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வரையக்கூடிய ஊடாடும் பயிற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.

இப் பயிற்சி நெறியானது எந்த சூழலுக்கும் எளிதில் மாற்றியமைக்கக் கூடியதாகவுள்ளது மேலும் நைஜீரியா, தன்சானியா, ஜோர்டான், இந்தியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளிலுள்ள சர்வ மத பங்குபற்றுனர் குழுக்களிடையே உள்ளூர் நெறியாளர்களால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

சில சூழல்களில் மனித உரிமைகள் பற்றி நேரடியாகப் பேசுவது ஆபத்தானது – பாடநெறி உரிமைகளைப் பற்றி பேசினாலும், மனித உரிமைகளைப் பற்றி குறிப்பிடாமல் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையைப் பற்றி பேச உதவும் கருவிகள் மற்றும் பயிற்சிகளும் இதில் அடங்கும் – குறிப்பாக ‘புல்லாங்குழல் மற்றும் தாள வாத்தியத்தின் பாடல்கள்‘ இன் கதை.

அனைத்து பயிற்சி நெறிக்கான கைநூலைப் பெற இங்கே அழுத்துக

அனைத்து பயிற்சி நெறிக்கான கை நூல்

எவ்வெவ்மொழிகளில் இப்பயிற்சி நெறி உள்ளது என்பதை காண்க.

அனைத்து மொழி பதிப்புக்கள்

எங்கள் சூழல்களில் FoRB ஐ மேம்படுத்துவதற்குப் பணிபுரியும் நிறுவனங்களாக எங்கள் பணியை எளிதாக்கும் இது போன்ற உயர்மட்ட வளங்களை அணுகக் கூடியதாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

மைக் கேப்ரியேல்

இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் (NCEASL)

பயிற்சி நெறியின் இலக்குகள்

  • சமுதாயங்களுக்குள் மற்றும் சமுதாயங்களுக்கிடையில் காணப்படுகின்ற பன்முகத்தன்மையினை அங்கீகரிப்பதற்கும் மற்றும் பாராட்டுவதற்கும் உதவி செய்தல்
  • மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்குரிய உரிமை உள்ளடங்கலாக எமக்கு மனித உரிமைகளை புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் உதவி செய்தல்
  • எங்களுடைய சமுதாயங்களில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளை அடையாளம் காணுதல்
  • அத்தகைய பிரச்சினைகளை ஒன்றாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்தல்

யாருக்காக இப்பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது?

உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குநர்களுக்கான பயிற்சி நெறியானது கள மட்டங்களிலுள்ள மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது – தங்களுடைய சமுதாயத்தில் மற்றும் சமூகத்தில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளை அடையாளம் காணுவதில் கரிசனைக் கொண்டுள்ள மற்றும் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க விரும்புகின்ற நபர்களுக்காக- வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியானது பங்குபற்றுநர்களிடமிருந்து முன் அறிவு, அனுபவம் அல்லது மனித உரிமைகளை ஏற்றுக் கொள்ளல் என எதனையும் எதிர்பார்க்கவில்லை. தேவைப்படுத்தப்படுவது யாதெனில், திறநÊத மனப்பாங்கு, அமைதியான சகவாழ்வு மற்றும் சமத்துவத்தினால் வகைப்படுத்தப்படுகின்ற சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவி செய்வதற்கான ஆர்வம், மற்றும் ஊடாடலுடன் கூடிய பரஸ்பர கற்றல் மற்றும் சிந்தனை செயன்முறையில் ஈடுபடுவதற்கான விருப்பம் என்பனவே ஆகும். வரையறுக்கப்பட்ட கல்வியறிவு உள்ள பங்கேற்பாளர்களுக்கும் இது பயன்படுத்தப்படலாம், ஆனால் பல்கலைக்கழக படித்த குழுக்கள் மற்றும் உள்ளூர் மதத் தலைமைகளுடன் பயன்படுத்த இது ஒரு சிறந்த கருவியாகும்.

இது 12-24 நபர்களை உள்ளடக்கிய குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனினும், இதனைவிட பெரிய அல்லது சிறிய குழுக்களும் இதனைப் பயன்படுத்த முடியும்.

யார் இப்பயிற்சி நெறியினை நெறிபடுத்தலாம்?

உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குநர்களுக்கான பயிற்சி நெறியானது ஊடாடுகை மிக்கது – குழுப் பயிற்சிகள், விளையாட்டுக்கள், கதைகள், கலந்துரையாடல்கள் மற்றும் பாத்திரமேற்று நடிக்கின்ற பயிற்சிகள், அதேபோல முன்வைப்புக்களைக் கொண்டது. வயது வந்தவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கற்றல் செயன்முறைகளை வழிநடத்துவதில் சிறிதளவான அனுபவத்தினைக் கொண்டுள்ள எந்தவொரு நபரும் இதனை வழிநடத்த முடியும். நெறியாளருக்கு அதிகமாகத் தேவைப்படுகின்ற விடயம் யாதெனில், சூழமைவிற்கு கூர்திறன் உள்ளவராய் இருக்கின்ற பண்பே ஆகும்- சில விடயங்கள் அதிகளவில் உணர்வுபூர்வமானதாய் உள்ளபோது அல்லது அவற்றைக் கலந்துரையாடுவதில் ஆபத்து நிறைந்துள்ளபோது அதனை தீர்மானிப்பதற்கான இயலுமை மற்றும் அதற்கமைய செயன்முறையினை மாற்றியமைத்துக் கொள்வதற்கான இயலுமை, அதேபோல, உணர்ச்சிமிக்க நிலைகள் அல்லது பதட்ட நிலைகள் தோன்றுகின்றபோது, குழுக்களின் மாறுபட்ட நிலைகளைக் கையாள்வதற்கான இயலுமை.

இப்பயிற்சி நெறியினை நெறிப்படுத்துவதற்கு நீங்கள் மனித உரிமைகள், மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பில் அனுபவம் மிக்கவராக அல்லது அது தொடர்பான அறிவுள்ளவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. குறித்த விடயங்கள் தொடர்பாக, முன்வைப்புக்களுக்கான எழுத்துப்பிரதிகள் மற்றும் பவர்பொயின்ட்கள் உள்ளடங்கலாக உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. நெறியாளருக்கான வகிபாகம் நிபுணரொருவராக இருப்பதல்ல, மாறாக பரஸ்பரக் கற்றல் செயன்முறையொன்றினூடாக பங்குபற்றுநர்களை வழிநடத்துதலே ஆகும்.

பயிற்சி நெறிக்கான கைநூல்

இப் பயிற்சி நெறிக்கான கைநூலானது நெறியாளருக்கான வழிகாட்டி மற்றும் ஒவ்வொரு அமர்விற்குமான அதனுடன் கூடிய பவர்பாயிண்ட், கையேடுகள், விளையாட்டு அட்டைகள், சுவரொட்டிகள் மற்றும் விளக்கக்காட்சி எழுத்து நகல்கள் போன்ற துணை வளங்களைக் கொண்டுள்ளது.

பயிற்சியாளர்களுக்கான எங்கள் எல்லா வளங்களையும் கண்டறிய எங்கள் ஆங்கில தளத்தைப் பார்வையிடவும்.

மேலும் கற்க

மேலும் விவரங்களுக்கு இந்தப் படத்தை ஆங்கிலத்தில் பார்க்கவும்.