ம.அ.ந.சு (FORB) தொடர்பான திரைப்படங்கள்

இந்த 8 படங்களின் தொகுப்பு மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரம் (FORB) எதை உள்ளடக்கியது மற்றும் அது எப்போது வரையறுக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

கற்றலுக்கும் அவ் அறிவினைப் பகிர்தலுக்கும் திரைப்படம் ஒரு சிறந்த வழியாகும். எமது குறும் ‘விளக்குநர்’ படங்கள் தனிப்பட்ட கல்வி, இயங்கலை வழியான பணியாளர் பயிற்சி அல்லது குழுப் பயிற்சிகளுக்கு ஏற்றவை. அல்லது ஏன் வகுப்பறையை திருப்பி, பயிற்சிக்கு முன்னதாகவே பங்கேற்பாளர்கள் திரைப்படங்களைப் பார்க்கச்செய்து உங்கள் நேருக்கு நேர் பயிற்சிக்கு அவர்களை தயாராக வரச்செய்க !

1. மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய அறிமுகம்

மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்தின் மூலம் யார் அல்லது எது பாதுகாக்கப்படுகிறது? சர்வதேச ஒப்பந்தங்கள் இது பற்றி எதைச் சொல்கின்றன, இந்த ஒப்பந்தங்கள் எந்தெந்த உரிமைகளை நமக்கு வழங்குகின்றன? போன்ற விடயங்கள் இதில் பேசப்படுகின்றன.

2. விரும்பிய மதத்தை அல்லது நம்பிக்கையை கொண்டிருப்பதற்கு அல்லது மாற்றுவதற்கான உரிமை

உங்கள் மதத்தை அல்லது நம்பிக்கையை வைத்திருப்பதற்கு, மாற்றுவதற்கு அல்லது விட்டிவிடுவதற்கான தங்களுக்கிருக்கும் உரிமையை அரசாங்கங்கள், மத தலைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்படுத்த முடியுமா? சர்வதேச மனித உரிமைகள் இது பற்றி என்ன சொல்கிறன? யதார்த்தத்தில் என்ன நடக்கிறது.?

4. பலவந்தங்களிலிருந்து பாதுகாப்பு

ஒரு விடயத்தை பலவந்தப்படுத்தி செய்விப்பதனை அல்லது கூறவைப்பதனை இது குறிக்கிறது. மதம் அல்லது நம்பிக்கை சார் விடயங்களில் அரசு பலவந்தங்களை பிரயோகிக்கக்கூடாது என்பதையும் சமூகத்தில் இடம்பெறும் பலவந்தங்களிலிருந்து உங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் இத்திரைப்படம் ஆராய்கிறது. உலகெங்கிலும் இடம்பெற முடியுமான பலவந்தங்களின் வடிவங்களையும் இது உதாரணங்களுடன் சித்தரிக்கின்றது.

5. ஓரங்கட்டுதலிலிருந்து பாதுகாப்பு

மதத்தின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் ஓரங்கட்டுதல்முற்றாக தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதுடன் சமூகத்தில் இடம்பெறும் அத்தகைய ஓரங்கட்டுதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையுமாகும். உலகில் இடம்பெறும் ஓரங்கட்டுதலை சித்தரிக்கும் உதாரணங்களையும் இது கொண்டுள்ளது.

6. பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள்

பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமைகள் யாவை? என்பதை விளக்குவதுடன் பிள்ளைகளின் உரிமைகளை மற்றும் பெற்றோரின் உரிமைகளுக்கும் பிள்ளைகளின் உரிமைகளுக்கும் இடையேயான சமநிலையை உலகெங்கிலும் அரசாங்கங்கள் எவ்வாறு அத்துமீறுகின்றன என்பதனை உதாரணங்களுடன் விளக்குகிறது.

7. மனசாட்சியின் அடிப்படையில் ஆட்சேபித்தல்

தங்களால் செய்துமுடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும் விடயமொன்று தங்களது ஆழமான நம்பிக்கை ஒன்றுடன் முரண்படும்போது அவ்விடயத்தினை செய்யாது ஆட்சேபிப்பதற்கான உரிமை பற்றி இதில் பேசப்படுகிறது. இது, மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்தின் மிகவும் பலவீனமாக பாதுகாக்கப்படும் ஒரு அம்சமாகும்.

8. மத சுதந்திரத்தின் அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்தின் வரையறைகள்

பல அரசாங்கங்கள் மத சுதந்திரத்தினை அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்தினை ம ட்டுப்படுத்துகின்றன. ஆனால், இந்த மட்டுப்பாடுகள் எப்போது நியாயப்படுத்தப்பட முடியும் எப்போது நியாயப்படுத்தப்பட முடியாது? என்பது பற்றி பேசுவதுடன் இன்னும் ஆழமாகச் சென்று மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்தினை அமுல்படுத்துகையில் சட்டவாக்கங்களை செய்பவர்களும் நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமை ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் பற்றியும் பேசுகின்றது.

உங்கள் சமூகத்தில் ம.அ.ந.சு (FORB) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குனர்களுக்கான பயிற்சி நெறியினை கண்டறிக

மேலும் கற்க